படத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் மனிதம் போற்றும் ஜெயம் ரவி பட தயாரிப்பாளர்! முழு விவரம் இதோ.
முகப்பு > சினிமா செய்திகள்கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் கொரோனா நிவாரணமாக உதவிகளை செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐசரி கனேஷ் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு தனது உதவிகளை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் சங்கத்திற்கு 600 மூட்டைகள் அரிசி, பருப்பு மற்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் நடிகர் அஜித், லாரன்ஸ் உள்ளிட்டோரும் நிவாரண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.