காதலரை பிரிந்தது குறித்து முதன் முதலாக பேசிய ஸ்ருதி ஹாசன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகனின் மூத்த பெண்ணான ஸ்ருதி ஹாசன் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவிற்கு ஜோடியாக 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Shruti Haasan spoke about her break up with Michael Crosale

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், திரைப்படங்களில் அவ்வப்போது பாடவும் செய்கிறார். தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் பிரிட்டீஷ் நடிகர் மைக்கேல் கோர்சேல் என்பவரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து  பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் இருவரும் இணைந்து புகைப்படங்களை  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை பிரிவது குறித்து மைக்கேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். மேலும், ஸ்ருதி ஹாசனும் மைக்கேலுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்களை நீக்கினார்.

பின்னர் தனியார் தெலுங்கு சேனல் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் காதலரை பிரிந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த  அவர், நான் மிகவும் கூல் . எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். இது ஒன்றும் சினிமா காதல் இல்லை. என்பது போல பேசினார்.