www.garudabazaar.com

Varisu : "நான் அப்பவே சொன்னேன்ல"😍.. வாரிசு சிங்கிள்.. ஜானி மாஸ்டர் Viral ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து நடன இயக்குனர் ஜானி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

Jani Master Tweet about Thalapathy Vijay Varisu First Single

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

Jani Master Tweet about Thalapathy Vijay Varisu First Single

சில நாட்களுக்கு முன் டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில், " தளபதி விஜய் சார் ரசிகர்களே.. என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாஸ் லெவல் நடனத்தைக் காண தயாராக இருங்கள். தியேட்டரில் ஒருவர் கூட இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க மாட்டீர்கள். தீயா இருக்கும்". என ஜானி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சிங்கிள் குறித்து ஜானி மாஸ்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "நான் ஏற்கனவே சொன்னது போல் ரஞ்சிதமே பாடலில் தளபதி விஜய் சாரின் கிரேஸி மாஸ் நடனத்தை காண காத்திருங்கள். Chartbuster Varisu First Single loading" என பதிவிட்டுள்ளார். இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master Tweet about Thalapathy Vijay Varisu First Single

People looking for online information on Jani Master, Ranjithame, Varisu will find this news story useful.