www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய தயாரிப்பாளர்! இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Varisu TN Theaterical rights acquired by Seven Screen Studio Lalith sources

Also Read | Bigg boss 6 tamil : “மன்னிப்பு கேட்டும் அதிகாரம் பண்றாரு”.. பரபரப்பான 3வது வார நாமினேஷன்.. !!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

Varisu TN Theaterical rights acquired by Seven Screen Studio Lalith sources

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu TN Theaterical rights acquired by Seven Screen Studio Lalith sources

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லலித், ஏற்கனவே விஜய் & விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர். விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தினை தயாரிக்க இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bigg boss 6 tamil : மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.! பிக்பாஸில் பரபரப்பு

தொடர்புடைய இணைப்புகள்

Varisu TN Theaterical rights acquired by Seven Screen Studio Lalith sources

People looking for online information on Seven Screen Studio, Varisu, Varisu TN Theaterical rights, Vijay will find this news story useful.