www.garudabazaar.com

'வாரிசு' படத்துல தளபதி விஜய் பாடியிருக்காரா? இசையமைப்பாளர் தமன் சொன்ன EXCLUSIVE பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Vijay Varisu song update from Music Director Thaman S

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

Vijay Varisu song update from Music Director Thaman S

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Vijay Varisu song update from Music Director Thaman S

இந்நிலையில் வாரிசு படத்தில் தளபதி விஜய் பாடியுள்ளாரா? என்ற கேள்விக்கு  இசையமைப்பாளர் தமன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் பதில் அளித்துள்ளார்.  அதில், "இப்போதைக்கு அது பற்றி எதுவும் சொல்லமாட்டேன். வாரிசு படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறோம். விஜய் சாரின் ரசிகனாக என்னுடைய சிறப்பை கொண்டு வருவேன். வாரிசு படம் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என தெரியும்." என பதில் அளித்துள்ளார்.

'வாரிசு' படத்துல தளபதி விஜய் பாடியிருக்காரா? இசையமைப்பாளர் தமன் சொன்ன EXCLUSIVE பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu song update from Music Director Thaman S

People looking for online information on Thaman S, Varisu, Vijay will find this news story useful.