தல அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா ஸ்ரீதேவி மகள்? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 02, 2019 12:43 PM
தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிப்பதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இந்நிலையில், மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில், இப்படத்தின் மூலம் தமிழில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் பரவின.
இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தற்போது, இந்தியாவின் முதல் பெண் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.