www.garudabazaar.com

ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர் இது தான்! போஸ்டருடன் வெளியான சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயிலர் படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது.

Jailer Super Star Rajinikanth character name Revealed

Also Read | "ஜனனியா, ஆயிஷாவா?".. எலிமினேட் ஆன ஆள் பெயரை சொல்வதற்கு முன் கமல்ஹாசன் வைத்த Twist!!

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா திரைப்படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினார்.

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Jailer Super Star Rajinikanth character name Revealed

பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Jailer Super Star Rajinikanth character name Revealed

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.

Jailer Super Star Rajinikanth character name Revealed

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற்றது.

ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.   இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரக்டர் பெயர் "முத்துவேல் பாண்டியன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | "வேண்டாம் கோபால்ல்ல்...".. ரச்சிதாவை இமிட்டேட் செய்து கமல் கொடுத்த Thug Life பதில்!!

தொடர்புடைய இணைப்புகள்

Jailer Super Star Rajinikanth character name Revealed

People looking for online information on Jailer, Nelson Dilipkumar, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.