www.garudabazaar.com

"ஜனனியா, ஆயிஷாவா?".. எலிமினேட் ஆன ஆள் பெயரை சொல்வதற்கு முன் கமல்ஹாசன் வைத்த Twist!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

janani and aysha in final round elimination in bigg boss house

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த டாஸ்க், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது.

முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஐகானிக் கேரக்டர்களின் வேடமிட்டு நடித்திருந்தனர். இது தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் டாஸ்க்காக இருந்தது.

இதில் மைக்கேல் ஜாக்சன், சிவாஜியின் நேசமணி, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம், எம். ஆர். ராதா, சரோஜாதேவி, விக்ரமின் அந்நியன் கெட் அப், வடிவேலுவின் நாய் சேகர் என பல ஐகானிக் கதாபாத்திரங்களை சற்றே பெயர் மாற்றி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வலம் வந்திருந்தனர். மேலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரம் போல, அவர்கள் நடை, உடை, பாவனை உள்ளிட்ட விஷயங்களை சிலர் செய்திருந்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களின் கடந்த வார செயல்பாடு குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்களும் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து, அசீம், கதிரவன், ADK, ஜனனி, ஆயிஷா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

இதில், அசீம், ADK, கதிரவன் உள்ளிட்டோர் Save செய்யப்பட்டதாக கமல் அறிவிக்கவே, கடைசியில் ஜனனி மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் இருந்தனர். அப்போது யார் வீட்டில் இருந்து வெளியேறுவார் என சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்க, அனைவருமே ஆயிஷா பெயரை தான் தெரிவித்தனர். "இந்த வீட்டில் எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள்ன்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பேன். அதுவும் ஆகலாம், இல்ல நீங்க எதிர்பார்த்ததும் நடக்கலாம்" என கமல்ஹாசன் கூறியபடி, ஆயிஷா எலிமினேட் ஆனதையும் அறிவிக்கிறார்.

இதனை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட ஆயிஷா, "உங்க குஷி எனக்கு புரியுது" என போட்டியாளர்களிடம் கூறி விட்டு, "சார் வரேன் சார்" என கமல்ஹாசனிடம் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

janani and aysha in final round elimination in bigg boss house

People looking for online information on Aysha, Bigg boss, Kamal Haasan will find this news story useful.