www.garudabazaar.com

"வேண்டாம் கோபால்ல்ல்...".. ரச்சிதாவை இமிட்டேட் செய்து கமல் கொடுத்த Thug Life பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Kamalhaasan appreciates rachitha with a thug life response

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த டாஸ்க், ஏலியன்ஸ் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கிற்கு அப்படியே நேர் எதிராக அமைந்திருந்தது. சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது.

Kamalhaasan appreciates rachitha with a thug life response

முந்தைய வாரங்களை போல சண்டை அதிகம் இல்லாமல், சற்று கலகலப்பாக தான் இந்த வார டாஸ்க்கும் சென்றிருந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஐகானிக் கேரக்டர்களின் வேடமிட்டு நடித்திருந்தனர். இது தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் டாஸ்க்காக இருந்தது.

இதில் மைக்கேல் ஜாக்சன், சிவாஜியின் நேசமணி, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம், எம். ஆர். ராதா, சரோஜாதேவி, விக்ரமின் அந்நியன் கெட் அப், வடிவேலுவின் நாய் சேகர் என பல ஐகானிக் கதாபாத்திரங்களை சற்றே பெயர் மாற்றி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வலம் வந்திருந்தனர். மேலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரம் போல, அவர்கள் நடை, உடை, பாவனை உள்ளிட்ட விஷயங்களை சிலர் செய்திருந்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Kamalhaasan appreciates rachitha with a thug life response

இதில், சரோஜா தேவியாக நடித்திருந்த போட்டியாளர் ரச்சிதா, மேடையில் நடனமாடும் போது அப்படியே பழைய நடன அசைவுகளை போட்டு அவரை போலவே நடிக்கவும் செய்திருந்தார். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் மட்டுமில்லாமல், பார்வையாளர்கள் கூட பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், Weekend எபிசோடில் தோன்றிய கமல்ஹாசன், ரச்சிதாவை பாராட்டி இருந்தார். இது பற்றி பேசிடிய கமல்ஹாசன், "கேரக்டராகவே மாறி அழும் போது கூட அதே போல நடித்தீர்கள். கோபால் வேண்டாம் கோபால் என அழுதீர்கள்" என்பதை இமிடேட் செய்த கமல்ஹாசன், தொடர்ந்து பேசுகையில், "ஆனால் நான் கொடுத்தது கோபால் அல்ல பாதாம் பால் கொடுத்திருந்தேன்" என Thug Life பதில் ஒன்றை அளித்தார்.

Kamalhaasan appreciates rachitha with a thug life response

முன்னதாக, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தனது ஸ்பெஷல் உணவான பாதம் பாலை கமல்ஹாசன் கொடுத்திருந்த நிலையில், அதனை ஒப்பிட்டு ரச்சிதா Performance பற்றி அவர் பேசிய விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan appreciates rachitha with a thug life response

People looking for online information on Bigg boss 6 tamil, Kamal Haasan, Rachitha Mahalakshmi will find this news story useful.