“யாருக்காவது பர்த்டே wish பண்ணா போதும்… யாருப்பா நீங்க எல்லாம் …” பிரியா பவானி சங்கர் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியா பவானி சங்கர் Behindwoods சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணல் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Priya bhavani shankar talked about Rumours latest viral interview

Also Read | ‘Queen 2’ ஷூட்டிங்கில் ரம்யா கிருஷ்ணனோடு பிரபல நடிகை… வைரலாகும் BTS pics

பிரியா பவானி சங்கர்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தார். சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருந்தனர். பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Priya bhavani shankar talked about Rumours latest viral interview

வெற்றிப்படங்கள்…

எஸ்.ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே மற்றும் வெப் சீரிஸான பிளட் மணி ஆகியவற்றில் நடித்து தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. யானை மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.

நேர்காணல்…

தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நமது Behindwoods சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேகமான நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Priya bhavani shankar talked about Rumours latest viral interview

வதந்திகள்…

அதில் தன்னைப் பற்றி கிளப்பிவிடப்படும் வதந்திகள் பற்றி பேசிய அவர் “யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்து போட்டா போதும், உடனே நான் அவங்களோட காதல்ல இருக்குறதா கிளப்பி விட்டுர்றாங்க. இப்படிதான் சமீபத்தில் SJ சூர்யா சார் கிட்ட போய் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணீங்களான்னு கேக்குறாங்க… யாருப்பா நீங்க எல்லாம். அடுத்து வேற ஹரிஷ் பிறந்தநாள் வருது” என ஜாலியாக பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

Also Read | “VTK ஆடியோ ரிலீஸ தள்ளிவச்சிட்டு, எனக்காக… “ சிம்பு பத்தி பேசும்போது Emotional ஆன TR

“யாருக்காவது பர்த்டே WISH பண்ணா போதும்… யாருப்பா நீங்க எல்லாம் …” பிரியா பவானி சங்கர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani shankar talked about Rumours latest viral interview

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani shankar talked about Rumours will find this news story useful.