www.garudabazaar.com

"இளையராஜாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை" - கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காக்கா முட்டை  திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மணிகண்டன்.

director manikandan about Ilaiyaraaja santhosh narayanan

இந்த படத்திற்கு பிறகு, வித்தார்த் நடிப்பில்  குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கினார். இவரது அனைத்து படங்களும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி படத்தை தயாரித்து இயக்கினார். 

director manikandan about Ilaiyaraaja santhosh narayanan

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகிபாபு, நல்லாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். சிலநாட்களுக்கு முன் கலரிஸ்ட் பாலாஜி, இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டனுடன்  இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படத்தின் பிரிண்டை சோதித்ததாக அறிவித்து இருந்தார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படம் வரும் பிப்ரவரி 11 அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புதிய டிரெய்லரும் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை இயக்குனர் மணிகண்டனே செய்கிறார். முதலில் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார், சில காரணங்களால் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

director manikandan about Ilaiyaraaja santhosh narayanan

இது குறித்து நமது Behindwoods சேனலுக்கு இயக்குனர் மணிகண்டன் பேட்டி அளித்துள்ளார். அதில் "இளையராஜாவுக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், இளையராஜாவுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கு வேறு காரணம் உள்ளது என்றும், எனக்கும் இளையராஜவுக்கும் நடுவே எந்த பிரச்சினையோ, முரண்பாடோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

கொரோனா காலக்கட்டம், சில புறகாரணிகளே இளையராஜா கடைசி விவசாயி படத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போக காரணம் என மணிகண்டன் தெளிவுபடுத்தி உள்ளார்.மேற்கொண்டு கடைசி விவசாயி படம் குறித்தும், இளையராஜா, தனது முந்தைய படங்கள் குறித்தும் மணிகண்டன் பேசியுள்ளார். வீடியோ இணைப்பு கீழே உள்ளது. 

 

"இளையராஜாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை" - கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

director manikandan about Ilaiyaraaja santhosh narayanan

People looking for online information on Ilaiyaraaja, Kadaisi Vivasayi, Manikandan, Santhosh Narayanan, Vijay Sethupathi will find this news story useful.