Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

JaiBhim: 2022-ல் Oscar விருது வாங்குமா ஜெய்பீம்? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination

காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறுடன் வெளியிட்ட LATEST வைரல் புகைப்படங்கள்! ரசிகர்கள் வாழ்த்து

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.

Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.

ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம் வடதமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination

சில தினங்களுக்கு முன் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது பற்றி பலரும் பாராட்டினர் . மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடித்தது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் ஜெய்பீம் போட்டியிட உள்ளது.  இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில் ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது.

இந்நிலையில் அதிகாரபூர்வ விருதுக்கு பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடிக்குமா அல்லது போட்டியில் இருந்து வெளியேறுமா என் அரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் ஆஸ்கர் விருது பிரபல ஆங்கில நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் ஜெய்பீம் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் ரசிகர்கள் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கூடுதல் தகவல் : சற்றுமுன் வெளியான ஆஸ்கர் விருது இறுதிப்பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெறவில்லை

BREAKING: BEAST பட அரபிக்குத்து பாட்டுல இந்த விஷயம் இருக்காமா? அப்போ பாட்டு வேற லெவல் தான்!

Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination

People looking for online information on ஆஸ்கார் விருது, சூர்யா, ஜெய்பீம், Best Film, Jai Bhim, Oscar Award Nomination, Suriya will find this news story useful.