www.garudabazaar.com

கடைசி விவசாயி.. கெத்தா வருது.. அதுவும் தியேட்டர்ல.. விஜய் சேதுபதி வெளியிட்ட ரிலீஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் மணிகண்டன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடைசி விவசாயி'.

Kadaisi Vivasayi Manikandan Vijay Sethupathi release date

கடைசி விவசாயி

கடைசி விவசாயி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல தீவிர சினிமா விரும்பிகளிடம் முன்பிருந்தே இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானதை அடுத்து, இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அது தொடர்பான தகவல்களும் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன.

இயக்குநர் மணிகண்டன் தயாரிப்பில் 'கடைசி விவசாயி' 

கடைசி விவசாயி படத்தின் அனைத்துப் பணிகளும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம்  தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த பிரபல இயக்குநர் மணிகண்டனே 'கடைசி விவசாயி' திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

Also Read: ‘தல பாட்டு போட்டேன்.. இப்போ தளபதிக்கு Tribute Song.. இசையமைப்பாளர் பரத்வாஜ் Exclusive பேட்டி!

நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு

இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்கிற முதியவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இந்த முதியவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹார்வி இசையமைத்துள்ளனர்.

முன்னதாக கொரோனா பாண்டமிக் சூழலால் இந்த திரைப்படத்தின் படத்தின் வெளியீடு எப்போது என அறிவிக்கப்படுவது குறித்து நீண்ட நாட்களாக எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் 'கடைசி விவசாயி' படம்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

ரிலீஸ் அறிவிப்பு

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தம்முடைய சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்திலான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போடு! போடு! BiggBossOTT-ல இவங்க 2 பேருமா? டாப் கீரில் போகும் ரசிகர்கள்!  வெளியான கலர்ஃபுல் ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

Kadaisi Vivasayi Manikandan Vijay Sethupathi release date

People looking for online information on Manikandan, Vijay Sethupathi will find this news story useful.