சதீஷுக்கு காதல் திருமணமா..? விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி நடிகர் சதீஷின் திருமணம் காதல் திருமணம் என்று பரவிய தகவலை பெண் வீட்டார் மறுத்துள்ளனர்.

Is it a Love Marriage for Sathish, Director Chachi clarifies

கிரேசி மோகனின் நாடகக் குழுவில் பணியாற்றிய நடிகர் சதீஷ் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சினிமாவை தாண்டி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சதீஷ் குதர்க்கமாகவும், கேலியாகவும் கருத்து கூறுவதிலும் பிரபலமானார். சிங்கிள் ஸ்டேட்டஸில் இருந்து வந்த சதீஷ் தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

சமீபத்தில் சதீஷுக்கு எளிமையாக நடந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. வைவப் நடிப்பில் வெளியான ‘சிக்ஸர்’ திரைப்படத்தில் சதீஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சாச்சியின் தங்கை தான் சதீஷ் திருமணம் செய்யவிருக்கும் பெண் என்றதும், இது காதல் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில், சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் - சிந்து இருவரின் புகைப்படத்தையும் இயக்குநர் சாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

சதீஷ் - சிந்துவின் திருமணம் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.