சிவகார்த்திகேயன் - யுவன் காம்போவின் “ஹீரோ” சாங்கை கேட்க ரெடியா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's Hero film second single to be released by Yuvan on Nov 29

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கிட்டபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இம்மாத தொடக்கத்தில் வெளியானது.

தற்போது அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘ஹீரோ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை வரும் நவ.29ம் தேதி மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிடவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’ என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், ‘ஹீரோ’ சிங்கிள் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.