www.garudabazaar.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

actor Thamizharasan about Vetrimaaran Viduthalai Part 2

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Marriage Life எப்படி இருக்கு? 50 வருசத்துக்கு HONEY MOON-தான் 😍 PBS கமெண்ட்.. கௌதம் கார்த்திக் ஜாலி பேட்டி.!    

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்து, நடித்தவரும், டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குநருமான தமிழரசன் (எ) தமிழ் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார்.

actor Thamizharasan about Vetrimaaran Viduthalai Part 2

Images are subject to © copyright to their respective owners.

இந்த பேட்டியில் பேசிய தமிழரசன், “விடுதலை திரைப்படம், 4 அல்லது 5 கோடியில் 30 நாளில் எடுக்கப்படக்கூடிய சிறிய திரைப்படமாக உருவாகவேண்டிய திட்டத்தில் இருந்ததுதான். ஆனால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி போர்ஷன்கள் இணைந்ததால் இப்படத்தின் 2-ஆம் பாகம் உருவானது. ஒருவேளை விஜய் சேதுபதி இப்படத்தில் இணையாமல் இருந்திருந்தால், விடுதலை பார்ட் - 2 குறித்து வெற்றிமாறன் அண்ணன் யோசித்திருப்பாரா என தெரியவில்லை.

actor Thamizharasan about Vetrimaaran Viduthalai Part 2

Images are subject to © copyright to their respective owners.

சேது அண்ணனின் (விஜய் சேதுபதி) வருகை இப்படம் பெரிய படமானதற்கு காரணம். வெற்றிமாறன் அண்ணனுக்கும் பிசினஸ் இருக்கு. சேது அண்ணனுக்கும் பிசினஸ் இருக்கு. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்து தயாரிப்பாளரும் தயாராகிவிட்டார்” என குறிப்பிட்டார்.

actor Thamizharasan about Vetrimaaran Viduthalai Part 2

மேலும் பேசியவர், விடுதலை பார்ட் -2  உருவாகிவிட்டதாகவும் அடுத்த 3 மாதங்களிலேயே விடுதலை பார்ட் - 2 தயாராகிவிடும் என்றும் குறிப்பிட்டார். சொல்வதற்கான விஷயங்களும், நிறைய கதாபாத்திரங்களை காட்டுவதற்கான வெளி தேவைப்படுவதாலும் இப்படம் 2 பாகங்களாக வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read | “மணி Sir-க்கு பாட்டு எழுதுனா இவ்ளோ கவனிப்பாரா..?” - பாடலாசிரியர் சொன்ன சீக்ரெட்ஸ்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்.. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor Thamizharasan about Vetrimaaran Viduthalai Part 2

People looking for online information on Thamizharasan, Vetrimaaran, Viduthalai will find this news story useful.