சேர்மேன் போட்டியில் ‘பாகுபலி’ மொமண்ட்..! நிறுத்தாமல் கைத்தட்டிய தொழிலாளர்கள்.. Thamizhum Saraswathiyum
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் தமிழும் சரஸ்வதி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
Also Read | "2010-ல டிவி நிகழ்ச்சிகளை கோவை குணா நிறுத்திக்கொண்டார்.. காரணம் இதுதான்" - மதுரை முத்து உருக்கம்.
சேர்மேன் போட்டி
இதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தங்கை ராகினியை அர்ஜூன் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த காதலுக்கு மிகவும் சப்போர்ட் பண்ணியது தமிழும் சரஸ்வதியும்தான். இதனால் அவர்கள் மீது ராகினிக்கு மிகுந்த மரியாதை இருந்தது. இந்த நிலைமையில் தமிழின் அம்மா தன் மகன்களான தமிழ், கார்த்திக் மற்றும் மருமகன் அர்ஜூன் மூவருக்கும் தங்கள் குடும்பத்தின் அடுத்த கம்பெனி பொறுப்புக்கான சேர்மன் ஆக ஆகக்கூடிய வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு போட்டி வைத்தார்.
பழிவாங்கும் அர்ஜூனின் குடும்பம்
இந்த போட்டியில் அதிக புரொடக்ஷன் கிடைத்து, அதிக லாபம் ஈட்டுபவர்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிபதியாக முடியும். ஆனால் அர்ஜூன் இந்த குடும்பத்தில் சூழ்ச்சியை செய்து வந்தார். அர்ஜுனும் அவரது குடும்பமும் தமிழின் குடும்பத்தை முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில், தமிழின் வீட்டிலேயே தங்கி தமிழின் மனைவி சரஸ்வதியை குழந்தை பாக்கியம் இல்லை என சொல்லி குத்தி காட்டி பேசியது, ராகினிக்கும் தமிழுக்கும் புரிதலின்மையை ஏற்படுத்தியது உள்ளிட்ட வேலைகளை பார்த்து வந்தனர்.
தமிழுக்கு எதிரான அர்ஜூனின் சூழ்ச்சி
இன்னொரு பக்கம் தமிழ் நிறுவனத்தில் வேலை நடக்க விடாமல் அர்ஜுன் தடுக்க பார்த்தார். அப்படி இருந்தும் அர்ஜுனனின் நிறுவனத்தில் மிஷின் ரிப்பேர் ஆனபோது தமிழே சென்று சரி செய்தார்.
கடைசியாக தமிழ் தான் ஜெயிப்பார் என்கிற நிலை வந்ததும் வேறு வழி தெரியாத அர்ஜூன் தன் நிறுவனத்தில் தமிழ் பழுதுபார்த்த மிஷினை மீண்டும் பழுதாக்கி விட்டு அதற்கு காரணம் தமிழ் தான் என்று பழி போட்டார். இதேபோல் ராகினியின் மருத்துவருக்கான டிரெய்னிங்கை அரக்கோணத்தில் நடக்கும்படி தமிழ் தான் மாற்றி அமைத்திருந்தார். இந்த விஷயத்தையும் அர்ஜூன் ராகினி மற்றும் குடும்பத்தினரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்துவிட்டார்.
கொந்தளித்த கோதை
இப்படி தமிழுக்கு எதிரான விஷயங்களை வலுவாக்கி விட்ட அர்ஜூன் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே ரௌடிகளை வைத்து கத்தியால் குத்தி கொண்டு தமிழ்தான் தன்னை குத்திவிட்டார் என்று ராகினி முன்னாள் சென்று நாடகம் ஆட, குடும்பத்தினர் அனைவரும் நம்பிவிட்டனர்.
வெளியேறிய தமிழும் சரஸ்வதியும்
இதனால் தமிழ் ஆத்திரமடைந்து, “நீங்கள் ஒரு பாம்பென்று தெரியாமல் அதற்கு பால் வைக்கிறீர்கள். அது ஒருநாள் திருப்பி விஷயத்தை கக்கும்” என்று ஆவேசமாக எச்சரித்து கூறிவிட்டு தன் மனைவி சரஸ்வதியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, தனி கம்பெனி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சேர்மேன் நிகழ்வு
இந்நிலையில் சேர்மேன் ஆகும் நிகழ்வு கம்பெனியில் நடந்தது. இதில் தொழிலாளர்கள் முன் அர்ஜூனும், கார்த்திக்கும் பேச வேண்டும் என்கிற யோசனையை சரஸ்வதியின் ஆலோசனைப்படி வசுந்தரா, கோதையிடம் சொல்ல, கோதையும் அதை ஏற்று, அதன்படி கார்த்தி & அர்ஜூன் இருவரையும் தொழிலாளர்கள் முன் பேசவைத்தார். ஆனால் அர்ஜூன் பேசும்போது பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட கைத்தட்டல்கள் இருந்தன.
அர்ஜூன் தனக்கு கம்பெனியில் சேர்மேன் ஆகும் பதவி ஆசை இல்லை, இருப்பினும் தான் எவ்வளவு ஐடியாக்களை கொடுத்து கம்பெனியை திறம்பட நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பின் கார்த்திக் பேசும்போது, “நீங்கள் அனைவரும் ஒருவரைதான் சேர்மன் ஆக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள், அவர்தான் தமிழரசன். என் அண்ணன். நானோ அர்ஜூனோ அவர் செய்ததில் 10 சதவீதம் கூட செய்ய முடியாது. நான் படித்த படிப்பை வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்தேன். ஆனால் தமிழரசன் அண்ணன் தன்னுடைய யோசனை ஒவ்வொன்றிலும் தொழிலாளர்களை மட்டுமே நினைவில் வைத்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை மட்டுமே செயல்படுத்தினார். ஆனால் அவர் செய்த தவறுகளால், அவர் தற்போது குடும்பத்திலும் இல்லை, கம்பெனியிலும் இல்லை. அவர் மாதிரி முடியவில்லை என்றாலும் அதில் 50 சதவீதத்தை என்னால் தர முடியும் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார். ” என்று பேசினார்.
கார்த்திக், “இப்படி பேசும்பொழுது தமிழ் பெயரை சொன்னதுமே தொழிலாளர்கள் இடைவிடாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட பாகுபலி படத்தில் பிரபாஸ் இல்லாத ஒரு சபையில் பிரபாஸ் கதாபாத்திரமான பாகுபலி பெயரைச் சொன்னதுமே நீண்ட நேரம் பெரும் சலசலப்பு நிகழும். அதே போன்ற காட்சி இதில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். இனிதான் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சூடு பிடிக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "சரியான வழியில போயிருந்தா அவர் இன்னொரு சந்திரபாபு..".. கோவை குணா மரணம்.. மதன் பாப் உருக்கம்