ஷங்கரின் 'இந்தியன் 2' பிரபலம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில்... ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 01, 2019 10:52 AM
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தன. இந்த படத்துக்கு முதலில் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக கூறப்பட்டது.
தற்போது அவருக்கு பதில் எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறாராம். இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கும் ரத்னவேலு தான் ஒளிப்பதிவாளர் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இதனையடுத்து நமக்கு கிடைத்த தகவலின் படி அந்த செய்தியில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.