கமல்ஹாசனின் Multi Starrer படம் குறித்த சூப்பர் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 30, 2019 11:04 AM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான லொகேஷன் தேடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும், படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் நாம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
தற்போது, இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆக.10ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைகா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.