மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' பற்றி இயக்குனர் பார்த்திபன் பதிவிட்ட ட்விட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 28, 2019 02:28 PM
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக நட்சத்திரத் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்ற அளவிற்கு பல நட்சத்திரங்கள் படத்திற்காக ஒப்பந்தம் ஆகி வருவதாக செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் தவிர வேறு யாரும் இந்த சரித்திரப் படத்தில் நடிப்பதைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்தார்கள். இப்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'பொன்னியின் செல்வன்' பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும். திரு.மணிரத்னம் படைப்பில், என் பங்களிப்பில், பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக ஸ்பெல்லிங் மட்டுமே கற்றிருந்த நான் ஸ்விம்மிங் கற்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,
திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில்
'பொன்னியின் செல்வன்'.
அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்! pic.twitter.com/Dnva7CzStg
— R.Parthiban (@rparthiepan) July 28, 2019