Big Breaking: ‘இந்தியன் 2’-க்காக ஷங்கரின் மாஸ்டர் பிளான் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 31, 2019 05:03 PM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் திடீர் என்று விலக தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஷங்கருடன் ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும், படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் நாம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். அதன்படி, இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட்.12ம் தேதி சென்னையில் தொடங்கவிருப்பதாகவும், இந்த ஷெடியூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கரின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினம், ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காக இயக்குநர் ஷங்கர் தனது குழுவுடன் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைகா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.