பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு இன்று முக்கியமான நாள்...விஷயம் என்ன... 'செம' குஷியில் ரசிகர்கள்..!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை லாஸ்லியா. இவருக்கு அந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இவர் அந்நிகழ்ச்சியின் பொது நடிகர் கவின் என்பவரை காதலித்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது அவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரெண்ட்ஷிப்' மற்றும் நடிகர் ஆரி உடன் ஒரு படம் என்று கலக்கி வருகிறார் இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அந்த ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சமூக வலைதளத்தில் இன்னும் வாழ்த்து பதிவாகவில்லை என்று கவிலியா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.