முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் - கமல்ஹாசனின் சற்றே வித்தியாசமான வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் நேற்று (11.05.2020) முதல் சில வணிக செயல்பாடுகளுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (மே 12) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய நல்ல ஆரோக்கியமும், நீண்ட வாழ்நாளும் கிடைக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் @CMOTamilNadu அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2020