''இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கோம்'' - கொரோனா பாதித்த நடிகர் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் பாதிப்பால் உலக அளவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க, மக்கள் முடிந்த வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை நன்றாக சோப் உபயோகித்துக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது நலமாக இருப்பதாக அறிவுப்பு |

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஆதரவாக பிரபலங்கள் வீடியோ மூலம் மக்களிடம் அதன் நோக்கத்தை எடுத்துரைத்தனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பு குறித்து ஹாலிவுட் நடிகர், டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா பாதித்த இரண்டு வாரங்களுக்கு பிறகு தற்போது நலமாக உணர்கிறோம். மேலும், நீங்கள் யாருக்கும் கொடுப்பதில்லை. யாரிடமிருந்தும் பெறுவதில்லை. இது கொஞ்ச நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாம் ஒவ்வொருவரையும் சரியாக கவனித்துக்கொண்டால் இப்பொழுது இருக்கும் நிலைமையை சரிசெய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான, ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்க, ரசிகர்கள் அதிர்ச்சியைடைந்தனர். இதுகுறித்து அவர் அவ்வப்போது அப்டேட்கள் வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது உடல் நலம் தேறி வருவதாக அவர் அறிவித்துள்ளது கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Entertainment sub editor