www.garudabazaar.com
iTechUS

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா.. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh revolver Rita photo with redin Kingsley

Also Read | THUNIVU: மகனுடன் பிரபல தியேட்டரில் 'துணிவு' படம் பார்த்த ஆந்திரா அமைச்சர் ரோஜா.. வைரல் புகைப்படம்!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.4 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Keerthy Suresh revolver Rita photo with redin Kingsley

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy Suresh revolver Rita photo with redin Kingsley

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

Keerthy Suresh revolver Rita photo with redin Kingsley

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் ஆகியோர் இந்த படத்தினை தயாரிக்கின்றனர். கே. சந்துரு இந்த படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, டாக்டர், பீஸ்ட், அண்ணாத்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Varisu : விஜய் நடித்த 'வாரிசு'.. 7 நாள்ல உலக அளவில் இத்தனை கோடி வசூலா..?

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh revolver Rita photo with redin Kingsley

People looking for online information on Keerthy Suresh, Redin Kingsley, Revolver Rita, Revolver Rita Movie will find this news story useful.