மீண்டும் இணைந்த ஹாட்ரிக் கூட்டணி - ஹிப்-ஹாப் தமிழாவின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 07, 2019 12:06 PM
‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இயக்குநராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் FIRST LOOK போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது அதன்படி இப்படத்திற்கு நான் சிரித்தால் என டைட்டில் வைத்துள்ளனர்.
ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள ராணா, மிகவும் பிரபலமான அவரது ‘கெக்க பெக்க’ குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனை பலவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தெரிகிறது.
#NaanSirithaalFirstLook 🔥@hiphoptamizha #AvniMovies on a hat trick🤟@AvniGroups #SundarC @khushsundar #Raana @thinkmusicindia #HHT3 pic.twitter.com/2PwkAI3Afd
— Hiphop Tamizha (@hiphoptamizha) October 7, 2019