திகில் கிளப்பும் சுந்தர்.சி-யின் ‘இருட்டு’ பட டிரைலர் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 22, 2019 12:27 PM
இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் இருட்டு. ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வி.இஸட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் திகில் படமாக உருவாகியுள்ள `இருட்டு' படத்தில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வரும் அக்டோபர்.11ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அமானுஷ்ய சக்தியின் அட்டகாசத்தால் நிகழும் கொலைகளை விசாரிக்கும் அதிகாரி சந்திக்கும் திகில் அனுபவங்களை கூறும் விதமாக இந்த டிரைலர் உருவாகியுள்ளது.
திகில் கிளப்பும் சுந்தர்.சி-யின் ‘இருட்டு’ பட டிரைலர் வீடியோ வீடியோ