‘அய்யா தெய்வமே..!’ - Legendary காமெடியனின் ஆசியுடன் ஆரம்பித்த சூரியின் திரைப்பயணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 01:55 PM
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சூரி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவில் நடித்த தனது முதல் அனுபவம் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் பரோட்டா உண்ணும் போட்டியில் பரோட்டா சாப்பிட்டு பிரபலமானவர் நடிகர் சூரி. இதையடுத்து, பரோட்டா சூரி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான நவரச நாயகன் கார்த்திக் நடித்த ‘கண்ணன் வருவான்’ திரைப்படத்தில் ஒரு சிங்கிள் ஷாட்டில் சூரி நடித்துள்ளார். அந்த காட்சியில் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக திகழும் கவுண்டமணியுடன் ஒரு வசனம் பேசிவிட்டு செல்வது போல் வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனை ‘தமிழ் சினிமாவில் தான் பேசிய முதல் வசனம்’ என பரவசத்துடன் சூரி இந்த வீடியோவை பகிர்ந்து இயக்குநர் சுந்தர்.சி-க்கும், காமெடி நடிகர் கவுண்டமணிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் வரும் செப்.27ம் தேதி ரிலீசாகிறது.
20 years back ❤️
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV
— Actor Soori (@sooriofficial) September 25, 2019