விஷால் - சுந்தர்.சி இணைந்துள்ள ஆக்சன் படத்தின் டீஸர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயோக்யா' படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் 'ஆக்சன்' படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

Vishal, Hiphop Tamizha's Action movie teaser is out

இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராம்கி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் கபிர் சிங் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இந்த படத்தின் செய்தித்தாள் விளம்பரம் நாளை முதல் வெளியாகவுள்ளது. முதல் விஷால் மட்டும் இடம் பெறும் விளம்பரமும் வெள்ளிக்கிழமை விஷால் மற்றும் தமன்னா இருவரும் இணைந்துள்ள விளம்பரமும் வெளியாகவுள்ளது.

விஷால் - சுந்தர்.சி இணைந்துள்ள ஆக்சன் படத்தின் டீஸர் இதோ வீடியோ