90'S KIDS ஸ்பெஷல் - கோமாளி படத்தில் இருந்து வெளியான புதிய பாடல் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் ‘ஒளியும் ஒலியும்’ பாடல்  வீடியோ வெளியாகியுள்ளது.

Comali Oliyum Oliyum Video Jayam Ravi, Hiphop Tamizha

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார், ஷா ரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன ஒலியும் ஒளியும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. 90'S KIDS ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் இப்பாடலை சத்யநாராயணன், அஜய் கிருஷ்ணன் பாடியுள்ளனர்.இப்பாடலுக்கு கபிலன் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

90'S KIDS ஸ்பெஷல் - கோமாளி படத்தில் இருந்து வெளியான புதிய பாடல் வீடியோ இதோ! வீடியோ