BREAKING : சுந்தர்.சி நடிக்கும் "இருட்டு" படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 15, 2019 02:30 PM
சுந்தர்.சி முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியுள்ள படம் இருட்டு. இந்த படத்தை முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்குகிறார்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'. திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 11- ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி வெளியிடுகிறார்.