டிசம்பர் ரேஸில் இணைந்த ஹரீஷ் கல்யாணின் ரொமாண்டிக் காமெடி படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரீஷ் கல்யாணின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. இதைத் தொடர்ந்து அவர் நடித்த தனுசு ராசி நேயர்களே  என்ற ரொமாண்டிக் காமெடி படத்தின் டீசர் கடந்த திங்கள் வெளியானது.

Harish Kalyan's Next film Dhanusu Raasi Neyargale to be released in December

தற்போது இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இதில் ஹரீஷுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான், டிகன்கானா சூர்யவன்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையில் உருவான  இப்படத்தின் ‘முரடா முரடா’ ,‘ஐ வாண்ட் எ கேர்ள்’ இரு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஃபை ஸ்டார் கே. செந்தில் பெற்றுள்ளார். வரும் டிசம்பர் 6ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.