‘தனுசு ராசி நேயர்களே’ கல்யாணத்துக்கு பொண்ணு வேணுமா..? - அனிருத் பாடிய பாடல் லிரிக் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 07, 2019 11:49 AM
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் அனிருத் பாடிய குத்து பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பிகில்’ திரைப்படத்தின் நடிகை ரெபா மோனிகா மற்றும் திகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து அனிருத் பாடிய ‘I want a Girl’ என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் ஜிப்ரான் இணைந்து பாடியுள்ளனர். மேலும், இந்த பாடலை பாடலசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.
‘தனுசு ராசி நேயர்களே’ கல்யாணத்துக்கு பொண்ணு வேணுமா..? - அனிருத் பாடிய பாடல் லிரிக் வீடியோ வீடியோ