பிகில் நடிகையுடன் ஹரிஷ் கல்யாண் ஜோடி சேர்ந்துள்ள 'தனுசு ராசி நேயர்களே' டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 18, 2019 05:51 PM
'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி உள்ளிட்டோர் ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, முனீஷ்காந்த், டேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரின் படி தனது ராசிக்கேத்த பெண்ணை தேடும் இளைஞரின் கதை என்று தெரியவந்துள்ளது.
பிகில் நடிகையுடன் ஹரிஷ் கல்யாண் ஜோடி சேர்ந்துள்ள 'தனுசு ராசி நேயர்களே' டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Harish Kalyan, Reba Monica John, Ghibran, Sanjay Bharathi