Darbar Thiruvizha: சரவெடி ஆல்பம் loading..! - தர்பார் இசை குறித்து அனிருத்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 23, 2019 10:28 AM
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த நவம்பர்.7ம் தேதி ரிலீசானது. இந்நிலையில், அடுத்த மாதம் டிச.12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர், இசை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கெட் ரெடி ஃபோக்ஸ்.. சரவெடி ஆல்பம் லோடிங்..!’ என குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
🧘🏻♂️🧘🏻♂️🧘🏻♂️ pic.twitter.com/pA5DE1Ivap
— Anirudh Ravichander (@anirudhofficial) November 22, 2019