'லாஸ்லியா ரொம்ப தெளிவாய்ட்டாங்க, ஆனா கவின்...' - பிரபல பாடகி கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 03:33 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய ஹாட் டாபிக் சேரன், கவின், லாஸ்லியா விவகாரம் தான். ஃபுரூட்டி காலர் ஆப் தி வீக் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவிடம், சேரன் டிராமா பன்றார்னு கவின் சொன்னப்ப நீங்க ஏன் மறுக்கல என்று கேட்டார்.

அது பிக்பாஸ் வீட்டில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒளிபரப்பான புரோமோ வீடியோக்களில் ஓபன் நாமினேஷன் காட்டப்பட்டது. அப்போது சாண்டி, 'என்னால அவனை இப்படி பார்க்க முடியல' என்று நாமினேட் செய்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து பிரபல பாடகி ஸ்ரீலேகா Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''லாஸ்லியாவிடம் பேசாதிங்கனு சாண்டி கவினை தொடர்ந்து எச்சரிக்கிறார். அவர் சொல்ற மத்த எல்லாவற்றையும் கேட்கிறார்.
இதை மட்டும் கேட்க மாட்டேன் என்கிறார். ஆனா லாஸ்லியா தெளிவாகிட்டாங்க இப்போ. என்ன பன்றாங்களோ அத அவங்க உணர்ந்து தான் பன்றாங்க. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் ஃபிரெண்ட்ஷிப் கிடையாது. லவ்வா இல்லையானு தெரியல'' என்றார்.
'லாஸ்லியா ரொம்ப தெளிவாய்ட்டாங்க, ஆனா கவின்...' - பிரபல பாடகி கருத்து வீடியோ