தனுஷின் "அசுரன்" டீசர் குறித்து டிவிட் செய்த ஜிவி பிரகாஷ்! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை, படங்களை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்'.

G.V.Prakash Tweet About The Release Of Dhanush Asuran Teaser

கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்துள்ள படம் அசுரன் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு   இன்னும் சில நாட்களில் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் அறிவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்