'எனக்கு அவள பிடிக்காது, போதுமா ?' - நாமினேஷனில் வனிதாவுக்கு கோபமாக பதிலளித்த கவின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 10:10 AM
விஜய் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லையென்றாலும், எலிமினேஷன் இருப்பது போல் பாவித்து போட்டியாளர்களை பதட்டத்திலேயே வைத்திருந்தார் கமல்.

மேலும் நேற்றைய தினம் ஃபுரூட்டி காலர் ஆப் தி வீக்கில் லாஸ்லியாவிடம் பேசிய ரசிகை ஒருவர், கவின் உங்களிடம் சேரன் டிராமா செய்கிறார் என்று சொன்னதும் நீங்கள் ஏன் மறுக்கவில்லை என்று கேட்டார். அந்த விஷயம் நேற்று பூதாகரமானது. அதனை சுற்றியே நேற்று விவாதங்கள் இருந்தது.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் புரோமோவில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக ஓபன் நாமினேஷனில் பேசிய கவின், சேரன் மற்றும் ஷெரினை நாமினேட் செய்தார். சேரனை பார்த்து, 'நீங்கள் பார்க்காத வெற்றியில்லை. நேஷனல் அவார்டு உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளீர்கள். அதனால் உங்களை நாமினேட் செய்கிறேன்' என்றார்.
பின்னர் ஷெரினை நாமினேட் செய்ததற்கு வனிதா, 'அது சரியான காரணமாக தெரியவில்லை' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவின், 'எனக்கு அவள பிடிக்காது, என்ன அவ நாமினேட் பண்ணாள அதான். போதுமா?' என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
'எனக்கு அவள பிடிக்காது, போதுமா ?' - நாமினேஷனில் வனிதாவுக்கு கோபமாக பதிலளித்த கவின் வீடியோ