Yaanai

ஹரிஷ் கல்யாண் & அதுல்யா நடிக்கும் புதிய படம்… Title உடன் வெளியான மிரட்டலான firstlook

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ்கல்யாண் மற்றும் அதுல்யா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Harish kalyan new movie diesel first look

Also Read | “வாடிவாசல்-க்காக சூர்யா இந்த Home Work-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

ஹரிஷ் கல்யாண்

இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண். ஆனால் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன்தான். அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.

Harish kalyan new movie diesel first look

டீசல்

இந்நிலையில் இப்போது ஹரிஷ் நடிக்கும் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. டீசல் என்ற தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்கில் கையில் டீசல் பம்புடன் நிற்கும் தோற்றத்தில் காணப்படுகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தில் அவரோடு அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Harish kalyan new movie diesel first look

பிரபல கலைஞர்கள்

ஜி வி பிரகாஷ் நடித்த அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக எம் எஸ் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளராக கனா, நெஞ்சுக்கு நீதி மற்றும் பேச்சிலர் படங்களின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Also Read | “அடிக்கிற Ball எல்லாமே சிக்ஸ்…. எப்புடி சார்…” சக்ஸஸ் சீக்ரெட்டை பகிர்ந்த வெற்றிமாறன்

தொடர்புடைய இணைப்புகள்

Harish kalyan new movie diesel first look

People looking for online information on Diesel first look poster, Diesel Movie, Harish Kalyan, Harish kalyan Diesel Movie, Harish kalyan new movie will find this news story useful.