சச்சினை சந்தித்தால் இப்படிதான் ஆகுமோ.? ஒரு வார்த்தை கூட.. - ஹன்சிகாவின் பிரமிப்பான அனுபவம்!
முகப்பு > சினிமா செய்திகள்கிரிக்கெட் வீரரை சந்தித்த ஹன்சிகா சமீபத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு தனது அனுபவத்தை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர் தற்போது மஹா எனும் படத்தில் நடித்துள்ளார். ஜமீல் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா அண்மையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். அவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இதற்கு வார்த்தை கூட கேப்ஷனாக பதிவிட தேவையில்ல, நான் பிரமிப்பில் இருக்கிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.