வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து - 'மாஸ்டர்' நடிகர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்வெங்கட் பிரபு தனது தம்பியும் நடிகர், பாடகர், இசையமைப்பாளளர் என பண்முகம் கொண்டவருமான பிரேம்ஜிக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். அந்த பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி பிரேம்ஜி, எப்பொழுதும் மகிழ்ந்திரு என்று குறிப்பிட்டிருந்தார்.

வெங்கட் பிரபுவின் பதிவில் பல்வேறு தரப்பினரும் பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழத்துகள் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஷாந்தனு, 'பிறந்தநாள் வாழ்த்துகள் பிரேம்ஜி சார், அடுத்த வருஷம் நல்ல செய்தி சொல்லுங்க, கல்யாணம் பத்தி சொன்னேன். சிறப்பான வருடமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரேம்ஜி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார்.
Happy bday @Premgiamaren sarrrr 💛💛 adutha varusham nalla seydhi sollunga , kalyanam pathi sonnen🤪🤪 hahahah god bless u sarrr , have a fantastic year ahead 😊
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 25, 2020