www.garudabazaar.com

துணிவு படத்துக்காக சந்திச்ச H. வினோத் - ஜிப்ரான்.. இதான் விஷயமா? படு குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துணிவு' படத்தின் பணிகளுக்காக இயக்குனர் H. வினோத் - ஜிப்ரான் சந்திப்பு நடந்துள்ளது. 

H Vinoth Met Music Director Ghibran for Thunivu Work

Also Read | மனதை மயக்கும் 'வாத்தி' படத்தின் 1st சிங்கிள் பாடல்.. புது ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

H Vinoth Met Music Director Ghibran for Thunivu Work

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம்  துவங்கியது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு  சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல EVP Film City-யில் நடைபெற்றது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

H Vinoth Met Music Director Ghibran for Thunivu Work

இந்நிலையில் இயக்குனர் H. வினோத் இசையமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்த புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், எனது இயக்குனரின் பரபரப்பான படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் இசை பற்றிய ஆலோசனை. எனது புன்னகை படத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்கிறது." என ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் வெளியானதும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, படத்தின் இசை பற்றி பேசி வருகின்றனர்.

 

Also Read | பிரபல அஜித் படத்தின் ரிலீஸ் ஆகாத டிரெய்லர்ப்பா இது 😍 .. முன்னணி எடிட்டரின் தெறி வீடியோ...

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Met Music Director Ghibran for Thunivu Work

People looking for online information on Ajith Kumar, Ghibran, H Vinoth, Thunivu, Thunivu Movie Update will find this news story useful.