www.garudabazaar.com

THUNIVU: அப்டேட் இருக்கா?.. ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன துணிவு படத்தின் முன்னணி டெக்னீசியன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'வலிமை' படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Stunt Master Supreme Sundar Tweet about Thunivu Update

Also Read | Thunivu : 'துணிவு' அடுத்த கட்ட பணியில் நடிகர் அஜித்.. மஞ்சு வாரியர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வலிமை ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

 Stunt Master Supreme Sundar Tweet about Thunivu Update

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

 Stunt Master Supreme Sundar Tweet about Thunivu Update

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர் ஒருவர் ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரிடம் ட்வீட் செய்து "துணிவு அப்டேட் இருக்கா?" என கேட்டுள்ளார். இதற்கு  மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், ''வெகு விரைவில்" என ட்வீட் செய்து பதில் அளித்துள்ளார்.

 

Also Read | கோமாளி பட இயக்குனரின் 'லவ் டுடே'.. டைட்டில் கார்டில் தளபதி விஜயை கௌரவித்த படக்குழு..😍

தொடர்புடைய இணைப்புகள்

Stunt Master Supreme Sundar Tweet about Thunivu Update

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Stunt Master, Stunt Master Supreme Sundar, Thunivu, Thunivu Update will find this news story useful.