www.garudabazaar.com

பிரபல அஜித் படத்தின் ரிலீஸ் ஆகாத டிரெய்லர்ப்பா இது 😍 .. முன்னணி எடிட்டரின் தெறி வீடியோ...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் டிரெய்லர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது.

7 Years Of Blockbuster Vedalam Ajith Movie Unreleased Trailer

Also Read | அதர்வா - ராஜ்கிரண் நடிக்கும் 'பட்டத்து அரசன்' .. தஞ்சையை மையமாக கொண்ட கதையா.?

நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘வேதாளம்’.

2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் உடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருந்தார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார்.

7 Years Of Blockbuster Vedalam Ajith Movie Unreleased Trailer

இன்றுடன் வேதாளம் படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகிறது. 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப் பெரிய அளவில் வசூல் செய்த படம் வேதாளம். இந்த படத்தில் டாக்ஸி ஓட்டுனர் & தாதா என இரண்டு கெட்டப்பில் அஜித் நடித்திருந்தார்.

தற்போது வேதாளம் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிப்பிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடிப்பிலும் ரீமேக் ஆகிறது.

7 Years Of Blockbuster Vedalam Ajith Movie Unreleased Trailer

இந்நிலையில் எடிட்டர் ரூபன், தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் 7ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படாத வேதாளம் படத்தின் டிரெய்லரை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

வேதாளம் படத்தின் ரிலீஸ் சமயத்தில் படத்தின் டீஸர் மட்டும் வெளியானது. டிரெய்லர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | மனதை மயக்கும் 'வாத்தி' படத்தின் 1st சிங்கிள் பாடல்.. புது ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

7 Years Of Blockbuster Vedalam Ajith Movie Unreleased Trailer

People looking for online information on 7 Years Of Vedalam, Ajith Kumar, Vedalam, Vedalam Ajith Movie will find this news story useful.