www.garudabazaar.com

அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'.. படப்பிடிப்பு சென்னையில் இங்க தானா? வைரல் BTS ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின் பாடல்  படப்பிடிப்பு BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ajithkumar Thunivu Movie Song Shooting at EVP Film City

Also Read | போடு.! கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்'.. பட ஷூட்டிங் தென் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா..?

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajithkumar Thunivu Movie Song Shooting at EVP Film City

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

Ajithkumar Thunivu Movie Song Shooting at EVP Film City

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கியது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு தற்போது சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல EVP Film City-யில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Ajithkumar Thunivu Movie Song Shooting at EVP Film City

நடனக்கலைஞர் கிறிஸ்டியனோ அருள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பான படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்த வீடியோ & புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார்.

Also Read | Bigg boss Tamil : "நான் Resign பண்றேன்".. மகேஸ்வரி கேட்ட வார்த்தையால் அசீம் எடுத்த முடிவு?.. வீட்டில் சலசலப்பு!!

அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'.. படப்பிடிப்பு சென்னையில் இங்க தானா? வைரல் BTS ஃபோட்டோஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Thunivu Movie Song Shooting at EVP Film City

People looking for online information on Ajith Kumar, Ajithkumar Thunivu Movie Song Shooting, Thunivu will find this news story useful.