கமல்ஹாசன் அதிரடி - சமீபத்தில் வெளியான படம் குறித்து கருத்து - ''மதவெறி சாதிவெறி...''
முகப்பு > சினிமா செய்திகள்'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜூ முருகன் தற்போது ஜீவா நடிப்பில் 'ஜிப்ஸி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்க, சன்னி வெய்ன், லால் ஜோஸ், சுஷீலாம் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் பார்த்த கமல்ஹாசன், ''மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்று படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளாராம். இயக்குநர்கள் ராஜூ முருகன், கௌதம் மேனன், ஜீவா உள்ளிட்டோருடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
"மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' @ikamalhaasan பாராட்டு#KamalHaasan #Gypsy @Dir_Rajumurugan @JiivaOfficial pic.twitter.com/wx5zaDM721
— Diamond Babu (@idiamondbabu) March 8, 2020