‘வாட்ச்மேன்’ ஸ்பெஷல் ஷோ- முதல் விமர்சனமே வேற லெவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாட்ச்மேன்’ திரைப்படத்தின் குழந்தைகளுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

G.V.Prakash's Watchaman movie had special screening for school kids

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'வாட்ச்மேன். ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாய் ஒன்று பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சஸ்பன்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பள்ளி குழந்தைகளுக்காக பிரத்யேகமாக போட்டுக் காட்டும் விதமான சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரைப்படத்தை பார்த்த பள்ளி குழந்தைகள் நாயின் நடிப்பு அற்புதம் என கருத்து தெரிவித்ததுடன், நாய் வரும் காட்சிகளில் உற்சாகத்துடன் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்.12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்திருந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள்மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

‘வாட்ச்மேன்’ ஸ்பெஷல் ஷோ- முதல் விமர்சனமே வேற லெவல்..! வீடியோ