எங்கள் வீட்டில் விரைவில் புதுவரவு - கணேஷ் வெங்கட்ராமன் குஷி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதா மோகனின் 'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இவர் தமிழ் தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

Biggboss fame Ganesh Venkatraman said his wife Nisha is Pregnant

பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தன் தன்னம்பிக்கையால் இறுதிச்சுற்றுவரை வந்தார். இந்த நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கள் வீட்டில் புதுவரவை வரவேற்கவிருக்கிறோம். நிஷாவிற்கு பாரம்பரிய முறையில் சீமந்தம் நடைபெற்றது. வாழ்க்கையின் தந்தை என்கிற ஸ்தானத்தை அடைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்று தெரிவித்தார்.