இந்த படத்தின் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 22, 2019 01:44 PM
தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவிருக்கும் இப்படத்தை KYYBA எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
‘Trap City' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனியே, நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
அதே போல் இசையமைப்பாளராக தனுஷ் –வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அசுரன்’, சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் ‘சூரரை போற்று’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.