ஹாலிவுட் எண்ட்ரி.. வீடியோ வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 23, 2019 10:44 AM
தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
![GV Prakash Shares video of his Hollywood debut with Brandon GV Prakash Shares video of his Hollywood debut with Brandon](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/gv-prakash-shares-video-of-his-hollywood-debut-with-brandon-photos-pictures-stills.jpg)
அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவிருக்கும் இப்படத்தை KYYB எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
‘Trap City' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஹாலிவுட் நடிகருமான பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிராண்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டு, Trap City படத்தின் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. ‘பேச்சுலர்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
அதே போல் இசையமைப்பாளராக தனுஷ் –வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அசுரன்’, சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் ‘சூரரை போற்று’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
Shooting for @brandontjackson s #trapcity ... #hiphop film #hollywood pic.twitter.com/lCq6jgciTh
— G.V.Prakash Kumar (@gvprakash) September 23, 2019